ப்த சிருங்கிதேவி மந்திர்...

இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் "வாணி' என்னும் இடத்தில் உள்ளது.

அர்த்த சந்திப்பீடம் என்று கருதப்படும் இந்த ஆலயம் நாசிக்கிலிலிருந்து 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

Advertisment

4,800 அடி உயரத்தில், சைஹாத் திரி என்ற மலைத்தொடரில் இந்த ஆலயம் உள்ளது. ஏழுமலை களுக்கு மத்தியில் இந்த ஆலயம் இருப்பதால், "சப்த சிருங்கி' என்று பெயர் வந்தது. பசுமை நிறைந்த ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது ஆலயம். சப்த சிருங்கிதேவியை மகாலட்சுமி, மகாகாளி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று வடிவங்களில் மக்கள் வழிபடு கிறார்கள்.

இங்கு ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் தவமிருந்தாகக் கூறுகிறார்கள். தேன்கூட்டைத் தேடிச்சென்ற ஒருவர், அடர்ந்த மரங்களுக்குப் பின்னால் மறைந் திருந்த இந்த ஆலயத்தைப் பார்த்து, உலகிற்குக் கூறினார் என்பது வரலாறு.

இங்குள்ள அன்னைக்கு 18 கரங்கள் உள்ளன. அனைத்து அஸ்திரங்களும் கரங்களில் இருக்கின்றன. சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம், வருணனின் சங்கு, அக்னியின் குண்டம், வாயுவின் வில் மற்றும் அம்பு, இந்திரனின் வஜ்ராயுதம், எமனின் தண்டம், தட்சப்பிரஜாபதியின் ஸ்படிக மாலை, பிரம்மனின் கமண்டலம், சூரியனின் ஒளி, காளஸ்வரூபி தேவியின் வாள், கடலிலின் மாலை, குண்டலம், கவசம், விஸ்வகர்மாவின் கோடரி, இமாலயனின் சிம்ம வாகனம்... இவையனைத்தும் அன்னை யிடம் இருக்கின்றன.

Advertisment

sirungadevi

தேவியின் சிலை முழுவதும் செந்தூரம் பூசப்பட்டிருக்கும். மகாராஷ்டிரத்திலிலிருக்கும் ஆதி மனிதர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கி றார்கள். அங்கு குடிகொண்டிருக்கும் அன்னையை குலதெய்வமாகப் பலரும் வழிபடுகிறார்கள். தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகிறார் கள். நடந்துசெல்ல முடியாதவர்களுக்கு பல்லக்குகள் இருக்கின்றன.

பக்தர்கள் தாய்க்கு தேங்காய், பழம், பூ, புடவை ஆகியவற்றைப் படைக்கிறார் கள்.

பிரம்மாவின் கமண்டலத் திலிலிருந்து வெளிவந்த நீர், கிரிஜா நதியாக இப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த நதியின் இன்னொரு வடிவம்தான் இந்த அன்னை. பிரம்ம ஸ்வரூ பிணி என்றொரு பெயரும் இந்த அன்னைக்கு இருக்கி றது.

தீபாவளி, நவராத்திரி, அட்சய திரிதியை ஆகிய நாட்களில் இந்த ஆலயத் தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடிவருகிறார் கள். இந்த ஆலயம் இருக்கும் மலைத் தொடரில் 108 நீர்நிலைகள் உள்ளன.

ஆலயத்திற்கு எதிரில் மார்க்கண்டேய முனிவர் தவமிருந்த மலை இருக்கிறது. மகிஷாசுரனின் தொல்லை களைத் தாங்கமுடியா மல் அவதிப்பட்ட முனிவர் அன்னையிடம் வேண்டிக் கொள்ள, அன்னை துர்க்கையாக வந்து மகிஷாசுரனை அழித்தாள் என்பது வரலாறு. அதனால் மகிஷாசுரமர்த்தினி என்றொரு பெயரும் இந்த அன்னைக்கு உண்டு.

வருடம் முழுவதும் பக்தர்கள் அங்கிருக்கும் மலையைச்சுற்றி வருகிறார்கள். ராம நவமி யன்று பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். தசராவின்போதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

சதிதேவியின் வலது கை விழுந்த இடம் இதுவென்று கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்திற்கு விமானத்தில் செல்வதாக இருந்தால் மும்பை அல்லது புனே விமான நிலையத்தில் இறங்கவேண்டும்.

ரயிலிலில் செல்பவர்கள் சென்னையிலிருந்து புனேவுக்குப் பயணிக்க வேண்டும். 1,098 கிலோ மீட்டர் தூரம்... பயண நேரம் 21 மணி. அங்கி ருந்து 208 கிலோமீட்டர் தூரம் பயணித்து நாசிக்கை அடையவேண்டும். நாசிக்கிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது சப்த சிருங்கிதேவி மந்திர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இந்த ஆலயத்தை பக்திப்பெருக்குடன் மக்கள் வந்து வழிபடும் காட்சியைப் பார்ப்பதற்கு, கோடி கண்கள் வேண்டும்.